சென்னை புறநகர் ரயில்களிலும் கழிவறை வசதி

சென்னை புறநகர் ரயில்களிலும் கழிவறை வசதி

சென்னையிலிருந்து நீண்ட தூரம் செல்லும் புறநகர் ரயில்களில் பசுமை கழிவறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நிறைவு நிலையில் உள்ளன. இந்த வசதி வரும் மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. 

முதலில் சென்னையிலிருந்து அரக்கோணம், திருப்பதி, ஜோலார்பேட்டை, நெல்லூர் ஆகிய இடங்களுக்கு  ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. ஏழு பெட்டிகளை கொண்ட ரயிலின் மையப்பகுதியில் இந்த கழிவறை அமைக்கப்படுகிறது. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதனால், புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள், முதியோர், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் பயன் பெறுவார்கள்.