சென்னை மாணவியின் சாதனை

சென்னை மாணவியின் சாதனை

பூனேயில் நடைபெற்று வரும் 'கேலோ இந்தியா' இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் சென்னையை சேர்ந்த காருண்யா முத்துராமலிங்கம் வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உளவியல் படித்து வருகிறார். சென்னை பெருமாள் ராமசாமி ஸ்போர்ட்ஸ் பௌண்டேஷன் மாணவியான காருண்யா 46.60 மீட்டர்கள் வட்டு எறிந்துள்ளார். 

இவர் இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான தெற்காசிய போட்டிகள் 2018ல்  பங்கு பெற்று வட்டு எறிதலில் வெள்ளிபதக்கம் வென்றுள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற இளையோருக்கான உலக தடகள போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.