சோனியாவை காக்க சிதம்பரம் நடத்திய ரகசிய நடவடிக்கை

சோனியாவை காக்க சிதம்பரம் நடத்திய ரகசிய நடவடிக்கை

2011-2012-ம் வருடம் தாக்கல் செய்த  வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித் துறை ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பியது.  2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜோர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும், ராகுல் ரூ.154.96 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இதே போன்று காங்., கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது ரூ.48.93 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் நேஷனல் ஹெரால்ட் ரூ400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய பல முறை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தும், நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   இறுதியாக  உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த போது, கீழ் நீதிமன்றத்தின் உத்திரவிற்கு மாறாக தீர்ப்பு வழங்க இயலாது என்றும், வருமான வரித் துறையினர் ஆய்வு செய்யலாம் என உத்திரவு பிறப்பித்தனர்.  நீதி மன்றத்தின் மூலம் தப்பிக்க இயலாது என்பதால், வருமான வரித் துறை  அளித்த நோட்டீஸூக்கு எதிராக,  ராகுல் காந்தி மற்றும்  சோனியாவை பாதுகாக்க,   மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தில் ப.சிதம்பரம்  தனது செல்வாக்கை பயன்படுத்தி சந்தேகத்துக்குறிய வகையில் ஒரு சுற்றிக்கையிட  வைத்தார்.  ஜனவரி 8ந் தேதி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு வரும் சமயம், மேற்படி சுற்றிக்கையை  வைத்து வழக்கிலிருந்து விடுவிக்க குள்ள நரி தந்திரத்தை செய்தார்.  31.12.2018ந் தேதியிட்ட  மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் சுற்றிக்கை எண் 10 – 2018 ,  பொது மக்கள் ஆர்வம்  இல்லாத ஒரு நிறுவனத்தின் பங்குகள் வழங்குவதற்காக இயற்றப்பட்ட 1961-ம் வருட வருமான வரிச் சட்டம் 52(2) (viia)   ஒரு பொருந்தாமை பற்றிய தெளிவு என கூறி திருத்தப்பட்ட சுற்றிக்கையை பட்டியலிடப்படாத பங்குகள் தங்கள் நியாயமான சந்தை மதிப்பிற்கு மிகவும் கீழே விலையில் மாற்றுவதை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, நிறுவனம் 56 பிரிவு, பங்குகளை திருத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது,  என திருத்தம் செய்வதாக கூறி,  அரசுக்கு தெரியாமலே சுற்றிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

வருமான வரித் துறையில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளின் பார்வையினால், உடனடியாக பிரதமருக்கு தெரியப்படுத்தி, இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறிய பின்னர், 4.1.2019ந் தேதி வருமான வரித் துறை ஆணையம் சுற்றிக்கை எண் 02- 2019  மூலம் முந்தைய   சுற்றிக்கையை ரத்து செய்து ஆணை பிறப்பித்தது.  ஒரு பொது சொத்தை கொள்ளையடித்த கொள்ளைகாரர்களுக்கு ஆதரவாக களம் கண்ட ப.சிதம்பரம், நேர்மையான அமைச்சாராக இருந்திருப்பாரா என்ற சந்கேம் எழுகிறது.   It is apparent from the legislative intent that clause (vii a) was inserted in section 56(2) of the Act as an anti-abuse provision to prevent the practice of transferring shares of a specified company for no or inadequate consideration என குறிப்பிட்டது தான் சோனியாவையும், ராகுல் காந்தியையும் காப்பாற்றும் பிரிவாகும்.

4.1.2019ந் தேதி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் விவேக் தங்கே மற்றும் அகமது பட்டேல், வருமான வரித் துறை பிறப்பித்த சுற்றிக்கையை வரவேற்று, நேஷனல் ஹெரால்ட் வழக்கில் எங்களின் நிலைப்பாடு சரியானது என நிருபிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.   இதற்கு முக்கியமான காரணம், 8.1.2019-ல் விசாரணைக்கு வரும் போது, உச்ச நீதி மன்றத்தில் இந்த சுற்றிக்கையை காண்பித்து, ராகுல் காந்தியும், சோனியாவையும் காப்பாற்றலாம் என நினைத்தவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டது போல் இருந்தது ரத்து செய்த செய்தி.   ஆனால் அடுத்த நாள் இந்த உத்திரவு, அரசியல் பழிவாங்கும் செயலாகும் என பேட்டி கொடுத்துள்ளார்கள். 

ங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள், 2015-ல் மத்திய நிதி அமைச்சர் திரு. அஅருண் ஜெட்லி பர்க்கா தத்துக்கு கொடுத்த பேட்டியில்  நேஷனல் ஹெரால்ட் லிமிடெட் வாங்கிய கடன் தொகை ரூ90 கோடியை, காங்கிரஸ் கட்சிக்கு திருப்பி கொடுத்து விட்டால், வழக்கு முடிவுக்கு வந்து விடும் என கூறிய போது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூப்பாடு போடவில்லை.  உண்மையில், 5000 கோடிக்கு மேலான சொத்துக்களை சோனியாவின் குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு கடன் தொகை ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  

எப்படி அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்று சோனியாவும், ராகுலும், சிதம்பரமும் புத்தகம் வெளியிடலாம். சென்னை புத்தக கண்காட்சியில் நன்றாக விற்பனையாகும்.

-ஈரோடு சரவணன்