சோழனை போற்றியதற்கு கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்.

சோழனை போற்றியதற்கு கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்.

ராஜேந்திர முடி சூட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நீதிமன்றம் உத்தரவு இருந்த போதும் காவல்துறை ஊர்வலத்திற்கு தடை விதித்தது. தமிழனின் பெருமைக்குரிய ராஜேந்திர சோழனின் சாதனைகள் உலகறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக 2014 நவம்பர் 9ஆம் தேதி ஆர் எஸ் எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கம்பீரமாக நடந்தது. சுயம் சேவகர்கள், சங்க ஆதரவாளர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். காவல்துறை அத்துணை பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் தமிழர்கள் எத்தனை பேர் தெலுங்கர்கள் எத்தனை பேர் மார்வாடிகள் எத்தனை பேர் என்று யாரும் கணக்கெடுக்கவில்லை. அப்படி ஒரு கணக்கை எடுக்கும் பழக்கம் அந்த இயக்கத்தில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.


ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கத்தின் மீது அதற்கு எதிரானவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் பல அதில் முக்கியமான குற்றச்சாட்டு ஆர்எஸ்எஸ் தமிழர்களுக்கு எதிரான இயக்கம் என்று. இந்த ஒரு நிகழ்வு போதும் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று நிரூபிக்க. - Anand T Prasad