ஜனநாயக அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட விடவில்லை - பிரதமர்

ஜனநாயக அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட விடவில்லை - பிரதமர்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தென் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் முதலிய மாவட்டங்களை சேர்ந்த தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,"ராணுவமாக இருந்தாலும் சரி...தலைமை தணிக்கையாளர் அலுவலகமாக இருந்தாலும் சரி...எந்த ஜனநாயாக அமைப்பும் காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதில்லை." என்று கூறினார்.

"அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வீட்டு வசதி, சுகாதாரம், திறன் மேம்பாடு என்று அனைத்து வயதினருக்குமான நல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை மக்களிடம் பாஜக தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்." என்று அவர் கேட்டுக்கொண்டார்.