ஜனம் டிவியின் வெற்றி தேசியத்தின் வெற்றி

ஜனம் டிவியின் வெற்றி தேசியத்தின் வெற்றி

கேரளா TRP ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது ஜனம் டிவி. பல கார்ப்பரேட் தொலைக்காட்சிகளை பின்தள்ளி தற்போது ஏசியா நெட் சேனலுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ளது ஜனம் டிவி.

கேரளாவில் தேசியத்துக்கு எதிராக விஷத்தை கக்கி வரும் பல தொலைக்காட்சிகளின்  மத்தியில் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுத்து இயங்கிவரும் தொலைகாட்சி ஜனம். 

சபரிமலை பிரச்சனையின் போது மக்களின் கருத்துக்கு எதிராக மற்ற தொலைக்காட்சிகள் செய்தியை ஒளிபரப்பிய போது மக்களின் உணர்வுகளை மதித்து பக்தர்களுடன் ஐயப்பனும் முழுமையாக அர்ப்பணித்து செய்திகளை பரப்பி வந்தது ஜனம் டிவி.

இந்த செயலுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த சாதனை. கேரள மக்களிடையே தேசியத்திற்கு  என்றும் இடம்  இருக்கிறது என்பதை  இந்த ஒரு சாதனை நிரூபிக்கிறது.