ஜனவரியில் சந்திராயன்–2!

ஜனவரியில் சந்திராயன்–2!

அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திராயன்–2 ஏவப்படும் என, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி:

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கைகோள் வெற்றிகரமாக கடந்த 14ம் தேதி ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளால் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். 
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு வசதியாக, வானிலை மாற்றம் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் கொண்ட ஒரு செயலியை இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செயலி மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த மாத இறுதியில், பிஎஸ்எல்வி சி–43 ராக்கெட் ஏவப்பட உள்ளது. தொடர்ந்து, டிசம்பர் முதல்வாரத்தில் ஜிசாட்–11 ஏவப்படுகிறது. சந்திராயன்–2 செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜனவரியில் ஏவப்படும், இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு சிவன் கூறினார்.