ஜனவரி 25ல்  'மணிகர்ணிகா'

ஜனவரி 25ல் 'மணிகர்ணிகா'

முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் நாயகியான ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்யின் வாழ்க்கை வரலாறு 'மணிகர்ணிகா'  என்ற பெயரில் திரைப்படமாக தயாராகியுள்ளது. ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்யின் இயற்பெயர் 'மணிகர்ணிகா' என்பதாகும். மணிகர்ணிகா கதாபாத்திரத்தில் நடிகை கங்கணா ரனாவத் நடிக்கிறார். ஜீ ஸ்டியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை 125 கோடி ரூபாய் செலவில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் தயாரித்துள்ளது. 

அதுல் குல்கர்னி, ஜிஷ்ணு சென்குப்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அமிதாப்பச்சன் கதையை விவரிக்கும் இடங்களை பேசியுள்ளார். சன்சித் பல்ஹாரா, அன்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசை அமைத்துள்ளனர். பாடல்களுக்கான இசையை சங்கர் இஷான் லாய் அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதையை பாகுபலி புகழ் கே.வி.விரேந்திர பிரசாத் எழுதியுள்ளார். ராதா கிருஷ்ணா ஜகலரமுடியும், கங்கணா ரனாவத்தும் இயக்கியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது.