ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள் விளையாடும் விளையாட்டு - காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ்

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள் விளையாடும் விளையாட்டு - காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ்

ஜல்லிக்கட்டை தடை செய்தது நாங்கள்தான். அது காட்டுமிராண்டிகள் விளையாடும் விளையாட்டு. அதை மீண்டும் கொண்டு வந்தது மோடிதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தடை செய்வோம். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்து ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்காட்டுக்காக தமிழகம் பொழுங்கி எழுந்தது. பட்டிதொட்டி எங்கும் பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை மக்கள் தன்னெழுச்சியாக போராட தொடங்கினர். ஏதோ மத்திய பா...அரசின் மோடியே நேரில் வந்து வாடி வாசல் கதவினை அடைத்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டது போல் இங்கு பல டம்ளர்கள் பொழுங்கி எழுந்தனர். இதற்கெனவே தயாராக இருந்தது போல் தடைக்கு நேரடியான காரண கர்த்தர்களான காங்கிரஸ், தி.மு. தமிழ் தேசிய பிரிவினை வாதிகள், நாம் தமிழர், முஸ்லிம் அடிப்படைவாத கும்பல்கள் என பலர் ஒன்று இணைந்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

சென்ற காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மூலம் பீட்டா அமைப்பினர் ரேக்ளா ரேசுக்கு கேட்ட தடைக்கு ரொம்ப தாராள மனத்துடன் ஜல்லிக்கட்டுக்கும் சேர்த்து தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த தடையை வழங்கிய பிரேமானந்தா வழக்கு புகழ் நீதிபதி பானுமதி இப்படி இருக்கையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மூலம் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்கப்பட்டு, அரசு இதழிலும் வெளியிடப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையின் போது பழைய உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஜல்லிக்கட்டு ஒரு கொடுமையான விளையாட்டு. அது காளைக்களை வதைக்கிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கென பொங்கி எழுந்த தி.மு., கம்யூனிஸ்ட், தமிழ் பிரிவினை வாத கும்பல்கள் ஆதரவு கொடுத்த முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் ஒன்றிணைத்து ஒரே கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ளும் இந்த சமயத்தில் தைரியமாக காங்கிரஸ் முத்த தலைவர் இப்படி கூறுகிறார் என்றால் இந்த கூட்டணி தமிழக மக்களுக்கு என்ன சொல்ல போகிறது. மக்கள் மீண்டும் ஏமாற போகிறார்களா? அல்லது இந்த சந்தர்ப்பவாத ஏமாற்று கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுக்க போகிறார்களா?