ஜவான்களின் ஸ்வச் பாரத்

ஜவான்களின் ஸ்வச் பாரத்

நமது நாட்டின் ராணுவ வீரர்கள் "கன்னியாகுமரி ஜவான்ஸ்" என்ற அமைப்பை ஆரம்பித்து தங்களது ஊருக்காக சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அவர்கள் நமது நாட்டின் எல்லையில் பாதுகாப்பு மட்டுமல்லாமல் தங்களின் சொந்த மாவட்ட மக்களுக்காக பல சமூக சேவைகளை செய்கின்றனர்.

இந்த சேவையை நமது நாட்டின் ராணுவ வீரர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை தங்களுக்கு கிடைக்கும் விடுமுறையை சுழற்சி முறையில்  அவர்களது சொந்த மாவட்ட நலனுக்காக செலவிடுகின்றனர். முதலில் இந்த அமைப்பில் குறைந்த நபர்களே இருந்ததால், மரம் நடுதல், சாலை சீரமைப்பு பணிகள் போன்றவற்றை செய்து வந்தனர்.  அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர்.

இந்த அமைப்பின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியமண்டபம் பேருந்து நிறுத்த நிழற்குடையை புனரமைத்து உள்ளனர். கழிவுநீர் மற்றும் மதுபாட்டில்களால் துருநாற்றத்துடன்,மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பேருந்து நிறுத்தத்தை முழுவதுமாக சரிபார்க்கப்பட்டு புதுபொழிவுடன் புனரமைக்கபட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பேருந்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு நிழல் கொடுக்கும் வகையில் மரக்கன்றுகளை  நட்டனர். பயணிகளின் தாகத்தை தீர்க்க பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டது. 

இதில் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியின் போது காயமடைந்த சி ஆர் பி எப் வீரர் தனது மக்களுக்காக களபணியை செய்தது குறிப்பிடத்தக்கது.