ஜாதி பாகுபாடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிறது - பிரதமர்

ஜாதி பாகுபாடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிறது - பிரதமர்

நமது சமுதாயத்தில் ஜாதிய பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்காக பாடுபட்டவர் குரு ரவிதாசர். ஆனால், இப்போது வரை நமது சமுதாயத்தில் ஜாதிய பாகுபாடுகள் ஒழியவில்லை. இதனால், நமது சமூக அமைதி சீர்குலைகிறது. அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வதில் பிரச்னை எழுகிறது. மக்கள் ஒருவருடன் மற்றொருவர் நெருங்கி பழகுவதில் சிக்கல் எழுகிறது. இந்த சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் நலமுடனும், நல்லுறவுடனும் வாழ வேண்டும் என்று குரு ரவிதாசர் விரும்பினார்.

அவரது கனவை நிறைவேற்றும் வகையிலேயே மத்திய அரசு அனைவருக்கான வளர்ச்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி, வருவாய், மருத்துவம், குடிநீர் வசதி, பொதுப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு ஆகிய 5 கொள்கைகளை மையமாகவைத்து மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது. இதில் ஜாதி, மத, இன, பிராந்திய வேறுபாடுகள் ஏதுமில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக நமது சமுதாயத்தில் இருந்து ஜாதிய வேற்றுமைகள் முழுமையாக களையப்படவில்லை.

நாம் படைக்க இருக்கும் புதிய இந்தியா, நாட்டு மக்களின் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகவும், இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதாகவும் இருக்கும் என்றார்.

ஜாதி பாகுபாடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விஷயமாக உள்ளது. நமது சமுதாயத்தில் ஜாதிய உணர்வுகளைத் தூண்டுபவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.