ஜான் ஆலன் மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பு?

ஜான் ஆலன் மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பு?

கடந்த நவம்பர் 17ம் தேதி தடையை மீறி அந்தமான் தீவுகளில் உள்ள வடக்கு சென்னித்திலீஸ் தீவுக்கு மத பிரசாரம் செய்ய சென்ற அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் சாவோ என்பவர் அங்குள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரித்து வரும் அந்தமான் போலீஸார் இந்த விவகாரத்தில் பாபி, கிறிஸ்டியன் என்ற 2 அமெரிக்கர்களும்  தடை செய்யப்பட்ட தீவுகளுக்கு ஜான் ஆலனை மத பிரசாரத்திற்கு போக தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும்,   அதனால்,  அமெரிக்க அரசின் உதவியை கோரி பெற்றுத்தரும் படி மத்திய அரசை அணுகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

 பாபி, கிறிஸ்டியன் என்ற இரு அமெரிக்கர்களும் சுற்றுலா விசாவில் நவம்பர் 5 ம் தேதி  போர்ட் பிளையர் வந்து நவம்பர் 10ம் தேதி வரையில் அங்கு தங்கியிருந்ததாகவும். அவர்கள், பல முறை ஜான் ஆலனை அவரது நண்பரான அலெக்ஸாண்டர்  வீட்டில் சந்தித்ததாகவும்,  அவர்களை பற்றி ஜான் ஆலன் தனது டைரியில் எழுதி வைத்திருப்பதாகவும்  போலீஸார் தெரிவித்துள்ளனர்.  எனவே, அவர்களை விசாரணைக்கு உட்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு சென்னித்திலீஸ் தீவில் பழங்குடியினரால் கொன்று புதைக்கப்பட்ட ஜான் ஆலனின் உடலை மீட்க மானிடவியலாளர் துறை நிபுணர்களின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.