ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று தில்லியில்  காலமானார். அவருக்கு வயது 88.  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசில் 2001 - 2004ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ்.

1977ம் ஆண்டு மொராஜி தேசாய் அரசிலும், 1989- 90ல் வி.பி.சிங் அரசிலும் பங்கேற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 

பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,"அவர் வெளிப்படையான, அச்சமற்ற, தொலை நோக்கு பார்வை உடையவர். ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காவும் குரல் கொடுத்தவர். அவரது மறைவு மனவருத்தத்தை அளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.