ஜாலியன்வாலாபாக் படுகொலை மனிதத்தன்மையற்றது

ஜாலியன்வாலாபாக் படுகொலை மனிதத்தன்மையற்றது

ஜாலியன்வாலாபாக் படுகொலை மனிதத்தன்மையற்ற செயலாகும், அதற்காக நான் மிகவும் அவமானப்படுகிறேன் என இங்கிலாந்தை சார்ந்த பாதிரியார் கூறியுள்ளார்.  இங்கிலாந்தின் புகழ்பெற்ற கான்டெர்பரி தேவாலயத்தின் தலைமை பாதிரியார் இந்தியாவுக்கு சுற்று பயணமாக வந்துள்ளார்.

அவர் இன்று ஜாலியன்வாலாபாக் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது 'ஜாலியன்வாலாபாக் படுகொலை என்பது வரலாற்று பிழை ஆகும்.  எந்த காரணத்தைக்கொண்டும் அதற்க்கு நியாயம் கற்பிக்க இயலாது என் நாடு செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்' என வருத்தம் தெரிவித்தார்.   

சுதந்திர போராட்டத்தின்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஜாலியன்வாலாபாகில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.