'ஜின்னா இல்லம்'  இந்தியாவுடையதே!

'ஜின்னா இல்லம்' இந்தியாவுடையதே!

மும்பையில் உள்ள 'ஜின்னா இல்லம்' இந்தியாவிற்கே சொந்தம் என்றும் அதில் பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் வெளியுறவுத்துறை திட்ட வட்டமாக கூறியுள்ளது. மும்பையில் மலபார் ஹில் பகுதியில் கடலை நோக்கியவாறு இருக்கும் இந்த கட்டிடத்தில் பாகிஸ்தானின் தந்தையான முகமது அலி ஜின்னா 1930களில் வாழ்ந்தார்.  எனவே, அந்த கட்டடம் தங்களுக்கு வேண்டும் என்றும் அதில் தங்கள் மும்பை தூதரகத்தை செயல்படுத்தி கொள்வதாகவும் பாகிஸ்தான் உரிமை கோரியது.

ஆனால், இந்திய வெளியறவுத்துறை "தில்லியில் உள்ள ஹைதிராபாத் இல்லத்தை போன்று ஜின்னா இல்லமும் புதுப்பிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும், சாந்திப்புகள் நடத்துவதற்கும் உபயோகிக்கப்படும்." என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.