ஜெயலலிதாவின் புது  சிலை திறப்பு

ஜெயலலிதாவின் புது சிலை திறப்பு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி  அவரது உருவ சிலை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டது. ஆனால், அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால், வேறு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

தெலுங்கானா மாவட்டத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்த புதிய ஜெயலலிதா சிலை அதிமுக தலைமையகத்தில் இன்று முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.