"ஜெய் ஹிந்த்" அல்லது "ஜெய் பாரத்"

"ஜெய் ஹிந்த்" அல்லது "ஜெய் பாரத்"

இன்று முதல் குஜராத் மாநில பள்ளிகளில் வருகைப்பதிவுக்கு "ப்ரெசென்ட் சார்" "உள்ளேன் ஐயா" "ப்ரெசென்ட் மிஸ்" ஆகியவற்றிற்கு பதிலாக "ஜெய் ஹிந்த்" அல்லது "ஜெய் பாரத்" என்று தான் சொல்ல வேண்டும் என்று குஜராத் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. குழந்தை பருவத்திலிருந்தே தேச பக்தியை வளர்க்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சுதாமா கூறியுள்ளார். 

குஜராத் மாநிலத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும் தங்கள் மாநிலத்திலும் பின்பற்ற  ஆலோசிக்கிறோம் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு கூறியுள்ளது. 

சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே தேசபக்தியை வளர்க்க மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போது "ஜெய் ஹிந்த்"  அல்லது "வந்தே மாதரம்" என்று சொல்வது வழக்கமாக இருந்தது. இந்த நடைமுறையை மீட்டெடுப்பதன் மூலம் வருங்கால சந்ததியினரிடையே தேசபக்தியை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது குஜராத் அரசு. 

காங்கிரஸ் கட்சி வழக்கம் போல இந்த முயற்சியை குறை கூறியுள்ளது. தேசபக்தி என்பது உள்ளிருந்து தானாக வரவேண்டும் என்றும், "ஜெய் ஹிந்த்" அல்லது "ஜெய் பாரத்" என்று சொல்லுவதால் மட்டும் மாணவர்களிடையே தேசபக்தி வளராது என்றும் அது விமரிசித்துள்ளது.