டிரம்ப் கிண்டல், இந்தியா பதிலடி

டிரம்ப் கிண்டல், இந்தியா பதிலடி

தொடர் போரால் உருகுலைந்து போயிருக்கும்ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உலக நாடுகள் பலவும் பல விதங்களில் உதவி வருகின்றன. இந்தியாவும் அங்கு கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்த நூலகங்களை அமைத்து கொடுத்து வருகிறது. மேலும் பல கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகிறது. இதை நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலடித்துள்ளார். இதை பற்றி குறிப்பிட்ட அவர்,"இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி என்னிடம் தாங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் நூலகங்கள் அமைத்து கொடுத்திருப்பதாக கூறி வருகிறார். போர் நடக்கும் நாட்டில் நூலகங்களால் என்ன பயன்? அங்கே யார் படிக்க போகிறார்கள்?" என்று கிண்டலாக கூறியிருந்தார். அதாவது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்து வரும் வளர்ச்சி பணிகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சிறியது என்று பொருள் படுமாறு இருந்தது அவர் பேச்சு. 

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, "ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகங்கள் அமைத்து கொடுத்திருப்பது ஒரு சிறு சேவை தான். ஆனால, அதைத்தவிர வேறு பல கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். சல்மா அணையை கட்டிகொடுத்திருக்கிறோம். 218 கிலோமீட்டர் சாலையமைத்து கொடுத்திருக்கிறோம். ஒரு நாட்டில் கல்வி மேம்பட்டால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். எனவே தான் நூலகங்கள் கட்டி கொடுத்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எங்கள் உதவி மேலும் தொடரும்." என்று கூறியுள்ளது.