"டெல்லியில் இன்று மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்"

"டெல்லியில் இன்று மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்"

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் இந்த மாபெரும் போராட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.டெல்லிக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “ அதிகாரத்திற்கு மீண்டும் வர முடியாது என்பதை மோடி அறிந்துள்ளார். இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். புதிய அரசை காண விரும்புகிறோம் என பேசினார்.