தகுந்த பதிலடி தரப்படும்  - ஆர் எஸ் எஸ் தலைவர் நம்பிக்கை

தகுந்த பதிலடி தரப்படும் - ஆர் எஸ் எஸ் தலைவர் நம்பிக்கை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுவொரு கோழைத்தனமான செயலாகும்.  இதை ஆர்எஸ்எஸ் கடுமையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கிறது.