தக்காளியில் மோடியின் பெயர்...புதுமை படைத்த ஆந்திர விவசாயி!

தக்காளியில் மோடியின் பெயர்...புதுமை படைத்த ஆந்திர விவசாயி!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் விவசாயி ஒருவர் புதுமை முயற்சியாக தக்காளியில் பிரதமர் மோடியின் பெயரை அச்சிடு அசத்தியுள்ளார்.

சித்தூர் மாவட்டம் போனேட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தாக்காளி பயிரிட்டு வருகிறார். புதுமை முயற்சியாக பிரதமர் மோடியின் பெயர் பொறித்த தக்காளிகளை அவர் பயிரிட்டுள்ளார். கர்னூலை சேர்ந்த தனியார் நிறுவனம் வித்தியாசமான முறையில் தக்காளிகளை பயிரிட்டால் 25 சதவீதம் கூடுதல் லாபம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை அணுகிய சிவக்குமாருக்கு, பிரதமர் பெயர் பொறித்த அச்சு வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு பக்கம் இந்திய வரைபடமும், மறுபக்கம் பிரதமர் மோடி பெயரும் பொறித்த இதய வடிவிலான பிளாஸ்டிக் அச்சை அவர் பயன்படுத்தி தக்காளிகளை பயிரிட்டுள்ளார். இவ்வாறு அச்சடித்து விற்பனை செய்வதன் மூலம், தமது தக்காளிக்கு தற்போது அதிக லாபம் கிடைப்பதாக சிவக்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.