தங்க மங்கை மேரி கோம்

தங்க மங்கை மேரி கோம்

உலக மகளீர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் மேரி கோம். 35 வயதான மேரி கோம் 6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

தில்லியில் நடைபெற்ற உலக மகளீர் குத்துசண்டை போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் உக்கிரைனின் ஹன்னா ஒக்கோடாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இவர் இதற்கு முன் முதல்முறையாக உலக போட்டிகளில் பங்கேற்ற போது  2001ல் வெள்ளியும் பின்னர்  2002,2005,2006.2008,2010 ம் ஆண்டுகளில் தங்கமும் வென்றுள்ளார்.