தண்ணீர் பஞ்சம் - நாம்தமிழர் பித்தலாட்டம் - சாக்கடை விநியோகம்

தண்ணீர் பஞ்சம் - நாம்தமிழர் பித்தலாட்டம் - சாக்கடை விநியோகம்

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் இல் குடிநீர் குழாயில் தண்ணீர் தட்டுப்பாடின்றி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் சுயவிளம்பரத்திற்காக ஏரியிலிருந்து அசுத்தமான நீரை உறிஞ்சி மக்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. 

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் திங்கட்கிழமை லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தனர் அந்த தண்ணீர் அயப்பாக்கம் ஏரியிலிருந்து சுகாதாரமற்ற நீரை உறிஞ்சி எடுத்து வந்து விநியோகம் செய்ததாக கூறப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாராளமாக தட்டுப்பாடின்றி குடிநீர் குழாயில் வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியினர் முயன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.