தனித்தமிழ் நாடா..! பாயும் பஞ்சாப் சிங்

தனித்தமிழ் நாடா..! பாயும் பஞ்சாப் சிங்

நியூஸ் டி.என் சிறப்பு நேர்காணல் ;-

அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி (All India Anti Terrorist Front ) தலைவர் மற்றும் காங்கிரஸ் இளைஞர் அணியின் முன்னாள் தேசிய தலைவர்,மற்றும் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் அமைச்சராகவும் இருந்த மணிந்தர்ஜித் சிங் பீட்டா அவர்கள் நியூஸ் டி.என் க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் சிதம்பரத்தின் மீது கைது நடவடிக்கை மட்டும் போதாது அவர் மீதான  விசாரணையை தீவிரபடுத்தி அவர்செய்த பல தேசவிரோத செயல்களையும் வெளிக்கொணர வேண்டும் என்றும் அவரை வெளியேவிடுவது தேசியப்பாதுகாப்பை கேளிவிக்குறியாக்கும் என்று கூறினார்.

மற்றும் ரஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் ராஜிவ் காந்தி கொலை வெறும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது மட்டும் அல்ல அதுஒரு அரசியல் படுகொலை என்றும் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தவறை ஒருபோதும் பா.ஜ.க செய்யாது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தனித்தமிழ் நாடு பிரிவினை பேசும் பிரிவினைவாதிகள் குறித்த கேள்விக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகளை துவைத்து காய போட்ட மத்திய அரசிற்கு நேற்று முளைத்த காளான்கலான தமிழ் தேசியவாதிகள் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும் தேசபக்திகொண்ட 130 கோடி மக்களும் விழிப்புணர்வோடு இருக்கும் வரை அவர்களின் என்னம் ஈடேறாது என்றும் தெரிவித்தார்.

சண்முக ராஜா கோவை