தமிழகத்திற்கு புகழாரம்

தமிழகத்திற்கு புகழாரம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நிறைவு பெற்றது. இதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு நிறைவுரையாற்றினார்.  அப்போது அவர், "தமிழ்நாடு சாலை, ரயில், வான் வழி, கடல் வழி என்று எல்லா விதமாகவும் எளிதில் தொடர்பு கொள்ள கூடிய மாநிலம். எல்லா வளங்களும் நிறைந்து தொழில் துவங்க ஏற்ற அமைப்பையும் சூழலையும் கொண்டது. திறன் பயிற்சி பெற்ற கடினமாக உழைக்ககூடிய, தொழிற்நுட்ப வல்லமை வாய்ந்த மனித வளத்தை கொண்ட மாநிலம் தமிழகம்." என்று  புகழாரம் சூட்டினார்.

இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் பெறப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் 10.50லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.