தமிழகத்தில் பங்களா தேஷ் நாட்டினரின்  ஊடுருவல் ஆபத்து

தமிழகத்தில் பங்களா தேஷ் நாட்டினரின் ஊடுருவல் ஆபத்து

      டிசம்பர் மாதம் 15ந் தேதி மத்திய புலனாய்வு அமைப்பினர், தமிழகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில், பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன.  இவர்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன்  தொடர்பு இருப்பதாக கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.  குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் பங்களா தேஷ் நாட்டில் உள்ள ஜமாத் உல் முஜாஹுதின் பங்களா தேஷ்  பயங்கரவாத அமைப்புடன் தொடர்ப்பில் இருப்பதற்குறிய ஆவணங்களும், செல்பேசியில் கிடைத்த எண்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.   இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் உள்ளன.  ஒன்று மாநில காவல் துறையினருக்கு இது பற்றி தெரியாதா? ஏன் மத்திய புலனாய்வு பிரிவினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.  இரண்டாவது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பங்களா தேஷ் நாட்டின் இஸ்லாமியர்கள் ஊடுருவியது போல் தமிழகத்திலும் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள் என்பதும் கவலைக்குறிய விஷயமாகும்.  அஸ்ஸாமை போல் தமிழகத்திலும் பங்களா தேஷ் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் உருவாகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

       தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக, 2006-ல் பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக திரு. இல.கணேசன் நியமிக்கப்பட்ட பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், கோவையில் 30,000க்கும் மேற்பட்ட பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளார்கள். கோவையில் உள்ள நகைகடைகளில் கூலி தொழிலாளர்களாகவும் உள்ளார்கள்.  இவர்களுக்கு ரேஷன் அட்டைகள், குடியுருப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவ்வாறு வழங்குவதற்கு ஆளும் கட்சியினரின் உதவி புரிந்துள்ளார்கள், குறிப்பாக திராவிட இயக்கத்தினர் முழு உதவி புரிந்துள்ளார்கள்.  இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மாநில அரசின் அலட்சியத்தால், கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் அதிக அளவில் பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளார்கள்.   2009-ல் திருச்சியில் ஹிந்து ஆதி திராவிடர் மறுமலர்ச்சி கழகத்தின் சார்பாக சட்ட விரோதமாக திருச்சியில் ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களை நாடு கடத்த வேண்டும் என ஆர்பாட்டம் நடைபெற்றது.

       கோவை, திருப்பூர் பகுதியில் பெருமளவு தொழிற்சாலைகள் இருப்பதால், தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு முழுமையான விசாரணைன்றி தொழிற்சாலைகளில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள்.  இதன் காரணமாக குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்ற காரணத்தினால், ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் பல தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்துப்பட்டுள்ளார்கள்.  2018-ல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 22 சட்ட விரோத பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.   கைது செய்யப்பட்டவர்களிடம் ஆதார் அடையாள அட்டையும், இவர்களில் சிலரிடம் ரேஷன் அட்டையும், பலரிடம் வாக்காளர் அடையாள அட்டையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  பங்களா தேஷ் நாட்டில் உள்ள Khula வைச் சார்ந்த முகமது பாபுல் ஹூசைன்  திருப்பூர் செவ்வந்திபாளையத்தில் 13 வருடங்களாக  மளிகை கடை நடத்தி வருகிறார்.  இதில் வேடிக்கை என்னவென்றால், பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த இவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பது ஆச்சர்யமானதாக இருக்கிறது.

       திருப்பூர், ஊடுருவும் பங்களா தேஷ் இஸ்லாமியர்களின் சொர்க்கமாக திகழ்கிறது.  சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருப்பதாக உளவு துறையினர் தெரிவிக்கிறார்கள்.   சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில்  கைது செய்யப்பட்ட முகமது மோசூருதீன், பல வருடங்களாக திருப்பூரில் வசித்து வந்ததும், தனது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற வேண்டி மேற்கு வங்கம் வந்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தான்.  ஆனால் உண்மையில் இவன் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவன், பர்துவான் மாவட்டத்தில் சட்ட விரோதமாக ஊடுருவி, பின்னர் திருப்பூரில் தஞ்சம் புகுந்தவன்.  இவனுக்கு ஐ.எஸ். வுடனும்,  பங்களா தேஷ் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவன், பர்துவான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவன் என்றார்கள்.

       தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும், கர்நாடகாவிலும் சட்ட விரோத பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.  8.8.2018ந் தேதி தி ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி, தேசிய புலனாய்வு அமைப்பினர், ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் பயங்கரவாத அமைப்பின் முதன்மை பயங்கரவாதியான முகமது ஜிகாதுல் இஸ்லாம் என்பவனை கைது செய்தார்கள்.  இவன் பல பெயர்களில் கா்நாடக, கேரள மற்றும் தமிழகத்தில் உலா வந்ததாகவும் தகவல் வெளியானது.  இவனும் பர்துவான் குண்டு வெடிப்பின்  குற்றவாளி.  இவன் பெங்களுரின் புற நகரில்  உள்ள ராமநகாகரம் என்ற பகுதியில் தங்கியிருந்தான். 

       நடந்து முடிந்த கர்நாடக சட்ட மன்ற தேர்தலின் போது, ஆயிரக்கணக்கான பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை,  காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது.  வெறம் 248 பேர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்றும் அறிக்கை வெளியிட்டது.  இன்றைய முதல்வர் குமாரசாமி, 2015-ம் வருடம் ஏப்ரல் மாதம் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ்க்கு ஒரு கடிதம் எழுதினார், அதில், கர்நாடகாவில் 40,000 சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் இருப்பதாகவும், அவர்கள் பெயர்கள்  ஆளும் கட்சியின் ஆதரவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது எனவும்,  இதை நீக்க வேண்டும், அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். என எழுதியதை தற்போத நினைவு படுத்த வேண்டும்.  

       ஏன் கர்நாடாகவை பற்றி எழுத வேண்டியது என்றால், 2015 ஜீலை மாதம் பெங்களுரில் கட்டிடம் ஒன்று கட்டும் போது இடிந்து விழுந்ததில் மூன்று பேர்கள் பலியானார்கள்.  இவர்களில் இருவர் பங்களா தேஷ்  நாட்டின் இஸ்லாமியர்கள்.  சில மாதங்களுக்கு முன் கட்டிட தொழிலாளர்களை  தமிழகத்திலிருந்து அழைத்து வந்ததாகவும், அவர்கள் தமிழ் நன்றாக பேசினார்கள் என்றும் கூறப்பட்டது.  ஆகவே தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சட்டவிரோத பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

       கேரளவும் விதிவிலக்கல்ல.   கேரளத்தில் சில லட்சம் பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஜெய்சிக( Jisha )  கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் பங்களா தேஷ்லிருந்து ஊடுருவிய இஸ்லாமியர்கள்.   உள்ளுர் இஸ்லாமியர்களின் உதவியில்லாமல், சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழ இயலாது.  இதை உறுதி செய்யும் விதமாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 35 பேர்களை கைது செய்தார்கள்.  இவர்கள் தங்கியிருந்த  Edavannapara   பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாகும்.   கேரள அரசாங்கம் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் 2012 முதல் 2016 வரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் 38 கொலைகள் நடந்துள்ளன.  இதில்  36 கொலைகள் சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது.  இது கூட Amiyur Islam  என்ற ஊடுருவிய இஸ்லாமியன் பாலியல் கொடுமை  புரிந்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்து விசாரணை நடத்திய போது, மற்ற கொலை சம்பந்தமாக தகவல்கள் கிடைத்தன. 

       பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் ஊடுருவ, உள்ளுர் இஸ்லாமியர்களின் உதவியில்லாமல் தங்க முடியாது.   ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களா தேஷ் பயங்கரவாத அமைப்பிற்கு இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.  தமிழகத்தில் உள்ள அல்-உம்மா அமைப்பும், சிமி, இந்தியன் முாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், ஊடுருவியவர்கள் இலகுவாக தங்குவதற்கும், அவர்கள் மூலமாக பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் தப்பித்து பாதுகாப்பாக இருப்பதற்கும் இந்த உதவி தேவைப்படுகிறது. 

       தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டவிரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை பல்வேறு அமைப்பினர் சுட்டிக் காட்டிய பின்னரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.  இதற்கு முதன்மையான காரணம் வாக்கு வங்கி அரசியல்.  அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு வாக்களார் அடையாள அட்டை வழங்கியது போல் , தமிழகத்திலும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.   கேரள அரசாங்கம் கூலி தொழிலாளருக்கு வழங்கிய ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில், ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களும் அதன் பலனை அனுபவிக்கிறார்கள்.  உள்ளுர் இஸ்லாமியர்களின் உதவியுடன் இத்திட்டத்தில் இணைத்திருக்கிறார்கள்.  அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் படி 62,441 பேர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  இதில் 50 சதவீதம் ஊடுருவியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

       தமிழகத்தில் மாநிலத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வும் சரி அல்லது இதற்கு முன் ஆண்ட தி.மு.க.வும் சரி இந்து இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கு இம் மாதிரியாக ஊடுருவிய அந்நிய நாட்டு சக்திகளை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.  காங்கிரஸ் கட்சி கூட விடுதலை புலிகளின் ஊடுருவலை தடுக்க கொடுத்த குரல் போல், பங்களா தேஷ் ஊடுருவிய இஸ்லாமியர்களை தடுக்க வேண்டும் என குரல் கொடுக்கவில்லை.  தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் அதிக எண்ணிககையில் தொழிலாளர்கள் தேவைப்படுவதாலும், கம்யூனிஸ்ட்களின் பிடியில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக இவர்கள் இருப்பதாலும், தேச நலனைவிட தங்களின் நலனில் அக்கரை செலுத்துவதால், ஊடுருவியவர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

சிறுகச்சிறுக நமது நாட்டை ஆக்ரமிப்பு செய்யும் அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல மாநில அரசின் கடமையும் கூட என்பது நினைவில் கொள்ளவேண்டும். பயங்கரவாதத்தை மத பாகுபாடு பார்க்காமல் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போது தான் தமிழ்நாடு எப்போதும் அமைதி பூங்காவாகவே இருக்கும்.

-ஈரோடு சரவணன்.