தமிழகத்தில் பாஜக பலமான கூட்டணி - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக பலமான கூட்டணி - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

பாஜக மகளிரணி சார்பில், மீண்டும் மோடி- வேண்டும் மோடி என்ற பெயரில் மத்திய அரசின் சாதனை விளக்க இரு சக்கர வாகனப் பேரணி மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை மற்றும் திருப்பூர் வருகைக்குப் பிறகு தமிழக பாஜகவுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் அணியில் இல்லாத கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த தேர்தலில் பாஜக அணி தான் பலமான கூட்டணியாக இருக்கும். விரைவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என் கூறினார்.