தமிழகம் அமைதிப் பூங்கா தான் ஆனால் குண்டு வைக்கும் பயங்கரவாதிகளுக்கு

தமிழகம் அமைதிப் பூங்கா தான் ஆனால் குண்டு வைக்கும் பயங்கரவாதிகளுக்கு

NIA எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில் கோவையில் இன்று மூன்று பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 


கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாகின்ஷா, போத்தனூர் சாலையைச் சேர்ந்த அக்ரம் சிந்தா போத்தனூர் உமர் நகரைச் சேர்ந்த சதாம் உசைன், குனியமுத்தூர் சேர்ந்த அபூபக்கர் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கடந்த 30ம் தேதி வழக்கு பதிவு செய்து உள்ளனர். 


குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் அவரது கூட்டாளிகளும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ISIS கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ததாக NIA தெரிவித்திருக்கிறது. ஏமாந்த இளைஞர்களை ISIS அமைப்பில் சேர்ப்பது அதன் மூலம் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் கேரளத்தில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றுவது என்ற எண்ணத்தோடு சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வந்ததாக தகவல் கிடைத்ததாகவும் NIA கூறியுள்ளது. 


ISIS கேரளா தமிழ்நாடு பிரிவு வழக்கு எனக் குறிப்பிடும் இந்த வழக்கில். முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அசாருதீன் ஒரு குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் கருத்துக்களை பரப்பியதாகவும். இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட மதகுருவின் சஹாராஅசின் பேஸ்புக் நண்பராக இருந்ததாகவும் எனக் கூறி உள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இப்ராஹிம் ISIS காசர்கோடு வழக்கு என ஏற்கனவே விசாரித்து வரும் வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததாகவும் NIA தெரிவித்திருக்கிறது. 


இந்நிலையில் கோவையில் நேற்று 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் மொபைல் போன்கள் சிம் கார்டு பென்டிரைவ் மெமரி கார்டுகள் லேப்டாப்புகள் சிடி டிவிடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அசாருதீனை மற்றும் கைது செய்த NIA அதிகாரிகள் மற்ற ஐந்து பேரையும் விசாரணைக்கு NIA அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். 


மேலும் 6 பேரிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் உக்கடம் கரும்படை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள மூன்று பேரின் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் சோதனைக்குட்படுத்தப்பட்ட உள்ள மூன்று பேரும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது