தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 112 எண் சேவை

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 112 எண் சேவை

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில், '112' என்ற, அவசர கால உதவி எண் நேற்று முதல், செயல்பாட்டுக்கு வந்தது. போலீஸ், தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைக்கும், இந்த எண்ணை அழைக்கலாம். ஆம்புலன்ஸ் சேவை எண்ணான, '108 ' மட்டும், விரைவில், இந்த சேவையுடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நேற்று டில்லியில் துவக்கி வைத்தார். அப்போது, "இந்த சேவை, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும்," என அவர் தெரிவித்தார்.