தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கின்றது.

செப்டம்பர் 27 முதல் மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும்.