தமிழக காங்கிரஸில் என்றும் தீராத உட்கட்சி பூசல்

தமிழக காங்கிரஸில் என்றும் தீராத உட்கட்சி பூசல்

'ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக முடியாது' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"இளங்கோவன் யாரைத்தான் திட்டவில்லை? என்னை மட்டுமா, சிதம்பரம், தங்கபாலு, செல்வகுமார் என்று பொறுப்பில் உள்ள எல்லோரையும் தான் திட்டிக்கொண்டிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு தில்லிக்கு சென்று கொண்டேயிருக்கிறார்.  அவரது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சியில் தலைவர் மாற்றம் பற்றி முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். ஆனால், இளங்கோவன் மட்டும் வர முடியாது." என்று கூறினார். 

இதனால், தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெளிப்படையாகவே நடப்பது நிரூபணமாகியுள்ளது.