தமிழக சட்டப்பேரவை தான் எங்களது இலக்கு - ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவை தான் எங்களது இலக்கு - ரஜினிகாந்த்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது. 

தமிழகத்தின் முக்கியப் பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.