தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக பட்ஜெட் தாக்கல்


சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது.சாதரணமாக பெப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்  மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது.

 

அதன் முக்கிய அம்சங்கள் :- 

 

 தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி  2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

 

 புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 

 மரபு திறன் மிக்க கலப்பின காளைகளின் விந்துகளை கொண்டு புதிய உறை விந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

 

பாசன வசதி :

 

 தமிழகத்தில் உள்ள 89 அணைகளை புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த 43 கோடி ஒதுக்கீடு.

 

  அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது

 

   இத்திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

 

  திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8    கோடி செலவில் செயல்படுத்த முடிவு 

 

மீன்வளத்துறை :

 

 மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 1600 கோடி திட்ட மதிப்பில் பாக்.விரிகுடா பகுதியில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 

 பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

 

  தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட 420 கோடி செலவில் அனுமதி.

 

 கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும்.

 

  மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 கட்டுப்பாட்டு அறைகளும் 18 உயர்மட்ட கோபுரங்கள், கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்.

 

  மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

  மீன்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

விவசாய கடன் :


கடந்த ஆண்டு பயிர் கடன் வழங்க 8000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

இந்த நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு.

 

உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

 இலவச கறவை மாடு திட்டத்தால் 75,448 பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.

 

 ரூ.198.75 கோடி விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

 

 ரூ.50 கோடி நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு.

 

கால்நடை பராமரிப்பு துறை :

 

 கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தபயிர் காப்பீட்டிற்கு ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம்.இதற்காக ரூ 84 கோடி மானியத்தில் புதிதாக 10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய  மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.

 

 வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு.

 

  பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் 21.70 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

 

 கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும்.


 ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

காவல்துறை :

 

 காவல்துறை நவீனமயமாக்கப்படும், திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு கணினி இணைப்பு திட்டத்தால் காவல்துறை நவீனயமாக்கப்பட்டுள்ளது.

 

 நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ407.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மெட்ரோ ரயில் :

 

2020 ஜூனுக்குள் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

 

 தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது.

பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி என்று தெரிவித்தார் .பன்னீர் செல்வம்

அம்மா மகப்பேறு பரிசு பெட்டகம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப் படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு கிடைக்க அரசு உறுதி.

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் விரைவில் செயல்படுத்தப்படும்.

பொதுபணித்துறை :

தமிழக சாலை மேம்பாடு 459.74 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 1986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும்

உலக வங்கி நிதி உதவியுடன், 1171 கோடி செலவில் 2வது கட்ட திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2019-20ம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்

நபார்ட் வங்கி உதவியின் கீழ் 299.60 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ. 13,605.19 கோடி ஒதுக்கீடு