தமிழக  பாஜக தொண்டர்களுடன் பிரதமர் உரையாடல்

தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் உரையாடல்

தென் சென்னை, காஞ்சிபுரம்,வேலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார். கோவை,சேலம்,நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்ட பாஜக தொண்டர்களுடன் கடந்த 15ம் தேதி அவர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பாஜக தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  தமிழகத்திற்கு பாஜக அரசு செய்துள்ளது போல் வேறு எந்த ஒரு அரசும் நலத்திட்டங்களை  நிறைவேற்றியதில்லை என்றும் அவர் கூறினார்.