தமிழக பாஜக வேட்பாளர்கள்

தமிழக பாஜக வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா வியாழக்கிழமை அறிவித்தார். 

தொகுதிகள்  வேட்பாளர்கள்
கன்னியாகுமரி  பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடிதமிழிசை செளந்தரராஜன்
சிவகங்கைஹெச்.ராஜா
கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்


பொன்.ராதாகிருஷ்ணன் : நாகர்கோவில் தொகுதியில் வெற்றி. 2004 தேர்தலில் தோல்வி. 2014ல் வெற்றி. வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சர். மோடி அமைச்சரவையில் கனரக தொழில்கள் இணை அமைச்சராக இருந்தார். பின், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர். 2009 முதல், 2014 வரை தமிழக பா.ஜ., தலைவர்.

தமிழிசை செளந்தரராஜன் : தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். தமிழக பா.ஜ.,வின் முதல் பெண் தலைவர்.தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார். 

ஹெச்.ராஜா : பா.ஜ., தேசிய செயலர். 2001 ல் காரைக்குடி எம்.எல்.ஏ.,

சி.பி.ராதாகிருஷ்ணன் : இதே தொகுதியில் 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 

நயினார் நாகேந்திரன் : அ.தி.மு.க.,வில் 1989ல் சேர்ந்தார். 2001ல் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று ஜெ., அமைச்சரவையில் அமைச்சர். 2011ல் மீண்டும் வெற்றி பெற்றார்.  2017ல் பா.ஜ.,வில் இணைந்தார்.