தமிழக வீரர்கள் - சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன்

தமிழக வீரர்கள் - சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள்  2 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர். மற்றொருவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்

சுப்ரமணியன் : சுப்பிரமணியன்(28) தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி-மருதம்மாள் தம்பதியரின் மகன். சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி. சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி இருக்கிறார். குழந்தையில்லை. பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த 10ம் தேதி ஊரில் இருந்து காஷ்மீருக்கு சென்றுள்ளார்இந்நிலையில்தான், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுப்பிரமணியன் பலியானார். அவரது உயிரிழப்பு குறித்து தகவலறிந்ததும் பெற்றோர் மற்றும் மனைவி கிருஷ்ணவேணிஉறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்

சிவசந்திரன் :  அரியலூர் வீரர் சிவசந்திரன்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன் (60). விவசாயி. இவரது மனைவி தாய் சிங்காரவள்ளி (55). இவர்களது மகன் சிவச்சந்திரன் (33). எம்..,பி.எட். பட்டதாரியான இவர், கடந்த 2010ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி (27) என்ற மனைவியும் சிவமுனியன் (2) என்ற மகனும் உள்ளனர். காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்`சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான் என்று சிவசந்திரனின் அப்பா சின்னையன் கதறினார்.