தமிழர்களை ஒருபோதும் நம்பாதே இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்

தமிழர்களை ஒருபோதும் நம்பாதே இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்

"மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை விட நூறு மடங்கு நல்லவர்கள். மலேசியாவில் உள்ள தமிழ் பேசும் இந்துக்களும் மற்ற மொழி பேசும் இந்தியர்களும் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோதியை ஆதரிக்கின்றனர்," என்று ஜாகிர் நாயக் பேசியுள்ளார். இது அங்கு உள்ள தமிழர்களிடையே மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜாகிர் தெரிவித்த கருத்துக்காகவே அவரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இன்னிலையில் தாம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டிராத சீனர்களும் தமிழர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனவே ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை விதித்துள்ளது.