தமிழில் பேசிய மோடி

தமிழில் பேசிய மோடி

ஹூஸ்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான நலமா மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்திய வம்சாவளியினர் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் மோடி உரையாற்றும் போது, நலமா மோடி? என நீங்கள் கேட்டுள்ளீர்கள், இந்தியாவில் எல்லாம் சௌக்கியம் என்று நான் பதில் அளிக்கிறேன் என்றார். இந்தியாவில் எல்லாம் சௌக்கியம் எனத் தமிழ் உள்பட 9 மொழிகளில் பிரதமர் மோடி பேசிய போது அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.