தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

தமிழகத்தின் நலன்கள் பெருக வேண்டும், தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. முதல்வரிடமும், துணைமுதல்வரிடமும் 10 அம்சக் கோரிக்கைகளைக் கொடுத்துள்ளோம். அதில், மாநில அரசால் நிறைவேற்ற முடிந்ததை நிறைவேற்றுங்கள் என்று கோரினோம். மத்திய அரசு செய்ய வேண்டியதும் 10 அம்சக் கோரிக்கைகளில் உள்ளன. அதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பெறுவோம்.

10 அம்சக் கோரிக்கைகளில் முதலாவதாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையை பிரதமரிடமும் கொடுத்துள்ளோம். நிச்சயம் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவோமாக. 8-ஆவது அட்டவணையில் 18 மொழிகள் தேசிய மொழிகள் இருந்தன. அது 22-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிலும், தமிழும் ஒன்று. அந்த தமிழ் உள்பட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நீண்ட நாள் கோரிக்கை. இதை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.