தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா?

தமிழ்நாடு என்ன குப்பை தொட்டியா?

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளாவிலிருந்து மருத்துவமனை கழிவுகள் மற்றும் மின்னணு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த 27 லாரிகளை பிடித்துள்ளனர். இதில் 23 லாரிகளில் மின்னணு கழிவுகள் இருந்தன. மற்ற நான்கு லாரிகளிலும் அறுவை சிகிச்சை கழிவுகள், காலாவதியான மருந்து பாட்டில்கள், ஊசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

மின்னணு கழிவுகள் மறுசுழற்சிக்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விசாரித்தபோது அந்த வாகனங்களின் ஓட்டுனர்களிடமும், கிளீனர்களிடமும் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, இவை சட்டத்திற்கு புறம்பாக தமிழகத்தில் கொட்டப்படுவதற்காக கொண்டு வரப்பட்டது நிரூபணமானது.

எனவே, இந்த லாரிகளுக்கு  ரூபாய் 16.50 லட்சம் அபராதம் விதித்தனர். வரும் மூன்று நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்திவிட்டு லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை திரும்ப கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதுவரையில் இந்த லாரிகளின் மேல் கிருமி நாசினி மருந்து அடிக்கபட்டு தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

கேரளாவிலிருந்து  அதன் தமிழக எல்லைகளான கோவை,கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரகசியமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்ப்டுவதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணமே இருந்தன. இப்போது இத்தனை பெரிய அளவில் கழிவுகள் கைப்பற்றட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.