தமிழ்நாட்டின் மீது குறி வைத்து விட்ட மத்திய அரசு

தமிழ்நாட்டின் மீது குறி வைத்து விட்ட மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையின் மையாமாக மாற்றுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று கூறினார். மேலும் அவர், தமிழகம் தொழிற்துறையிலும், மேக் இன் இந்தியா திட்டத்திலும் முன்னோடி மாநிலமாக விளங்குவதாகவும் கூறினார்.

கடந்த வாரம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் துவக்கி வைக்கப்பட்ட பாதுகாப்புத் தொழிற்த்துறை வழித்தடத்தால் தமிழகத்தில் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.