தமிழ், ஆன்மிகம் ,அறிவியல்

தமிழ், ஆன்மிகம் ,அறிவியல்

தமிழ், ஆன்மிகம் ,அறிவியல் 

தமிழ், ஆன்மிகம் , அறிவியல் இவை மூன்றும் இணைபிரியாத ஒன்றாகும்!

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக  ஏகி

அஞ்சிலே ஒன்றுபெற்ற அனங்கையை கண்டு 

அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன்

நம்மை அளித்துக் காப்பான்

இது கம்பராமாயணத்தில் ராம தூதன் அனுமனை , அவரது வீரத்தை, அவரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை விவரிக்கும் வரிகள் ஆகும். 

இதை படிக்கும்போதே தமிழின் அழகை நம்மால் உணரமுடியும். அதே சமயம் இவ்வரிகள் அனுமனை குறிப்பிடுவதால் இதில் ஆன்மிகம் இருப்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதில் அறிவியல் எங்கு இருக்கிறது என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.

இந்த பாடலின் முதல் வரி 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' - அனுமார் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மகன் ஆவார். ஆக அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் அனுமார் வாயு பகவானுக்கு பிறந்தவர் என்பது இவ்வரியின் பொருள் ஆகும் . ( வாயு-AIR ) 

 இரண்டாவது வரி 'அஞ்சிலே ஒன்றைத்தாவி'- நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே சீதாப்பிராட்டியாரை தேடிச்சென்ற அனுமன் ராமேஸ்வரத்திலுருந்து  ஒரே தாவில் கடலை தாண்டி இலங்கையை அடைந்தார் என்பதை குறிக்கிறது. ( நீர்-WATER )

மூன்றாவது வரி 'அஞ்சிலே ஒன்று ஆறாக '- ஸ்ரீ ராமருக்கு கூடப்பிறந்த சகோதரர்கள் மூன்றுபேர். பின்னர் குகனையும் ராமர் தன சகோதரனாக ஏற்றுக்கொண்டார். பின்னாளில் அந்த பட்டியலில் அனுமனையும் இணைத்து கொண்டார் ஸ்ரீ ராமர். இங்கு ஸ்ரீ ராமர் மனதில் இடம்பிடித்தார் அனுமார். மனம் இங்கு ஆகாயத்தை குறிக்கிறது. ( ஆகாயம்-SKY )

நான்காவது வரி 'ஆரியர்க்காக  ஏகி, அஞ்சிலே ஒன்றுபெற்ற அனர்கையை கண்டு '- அனுமார் இலங்கை சென்று சீதாப்பிராட்டியாரை சந்தித்த நிகழ்வை  இவ்வரிகள் குறிக்கின்றன. சீதாப்பிராட்டியார் பூமாதேவியின் மகள் ஆவார். ( பூமி-EARTH )

ஐந்தாவது வரி 'அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன்' - இலங்கைக்கு சென்ற அனுமாரை, தூதுவன் என்றும் பார்க்காமல் அவரின் வாலில் தீயை வைக்க உத்தரவிட்டான் ராவணன். அப்போது தனது சக்தியை காட்டுவதற்காக அனுமன் இலங்கை நகரை தீவைத்து எரித்த சம்பவம் நாம் அறிந்ததே. ( அக்கினி )


ஆக இந்த பாடலின் ஐந்து வரிகளும் ஒரே நேரத்தில் தமிழின் அழகோடு ஆனமீகம் மற்றும் விஞ்ஞானத்தை சொல்லிவிட்டது.