தமிழ் வேண்டாம், உருதுவே வேண்டும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம்

தமிழ் வேண்டாம், உருதுவே வேண்டும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம்

2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
 
இதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.