தவறாமல் ஓட்டளியுங்கள் - பிரதமர்,பகவத் வேண்டுகோள்

தவறாமல் ஓட்டளியுங்கள் - பிரதமர்,பகவத் வேண்டுகோள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி விறு,விறுப்பாக நடந்து வருகிறது. 7 கட்டமாக நடக்கும் இந்த தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இன்றைய களத்தில்1,279 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசத்தில் சட்டசபைக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்றைய தேர்தலில் 14.20 கோடி பேர் ஓட்டளிக்கின்றனர்.

தேர்தலில் அனைவரும் தங்களின் ஓட்டுக்களை தவறாமல் செலுத்த வேண்டும் என கேட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

முதல் ஓட்டாளர்களே !

இன்று லோக்சபா தேர்தல் நடக்கும் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதல் ஓட்டு செலுத்தவிருக்கும் இளையதலைமுறையினர் பெருவாரியான ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள என்று பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர்

மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் தனது ஓட்டை பதிவு செய்த பின் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத், ஓட்டளிப்பது நமது கடமை . இது நாட்டிற்காக ஓட்டளிக்கும் தருணம் இது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.