தாக்கியவரை மன்னித்தார்..!தாய்க்கு ஆறுதல் அளித்தார்..!

தாக்கியவரை மன்னித்தார்..!தாய்க்கு ஆறுதல் அளித்தார்..!

தன்னை தாக்கிய கல்லூரி மாணவனின் தாயிடம் தங்கள் மகனுக்கு எதுவும் ஆகாது என்று மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ உறுதி அளித்தார். மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ நேற்று கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்றார்.

அப்போது அங்குள்ள DYFI மாணவ அமைப்பால் அவர் தாக்கப்பட்டார். அதில் தாக்கிய மாணவர்களில் டேபன்ஜன் பல்லோவ் என்ற மாணவனின் தாய் தன் மகனை எதுவும் செய்யவேண்டாம் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதற்க்கு பதில் அளித்துள்ள பபுல் சுப்ரியோ‘அத்தை தங்கள் மகனுக்கு எதுவும் ஆகாது’ என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.

இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.