தாய்மொழிக்கு முக்கியத்துவம் - வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

தாய்மொழிக்கு முக்கியத்துவம் - வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

மாணவர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். தாயையும், தாய் மொழியையும் என்றுமே மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் தங்களின் பெற்றோரை மம்மி, டாடி என்று அழைப்பதைக் காட்டிலும் தங்களின் தாய்மொழியிலேயே அழைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியை பெருமையாக நினைக்க வேண்டும்.

இதற்காகவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அவரவர்களின் தாய்மொழியிலே பேசலாம் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தேன். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேநேரத்தில், மாணவர்கள் வேறு மொழிகளையும் கற்றுக் கொள்வது அவசியமாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் தகுதியையும், திறனையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே ஜாதி, மத, இன வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு  கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம், பயன்சார் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினர்.