'திப்பு ஜெயந்தி'க்கு வலுக்கிறது எதிர்ப்பு

'திப்பு ஜெயந்தி'க்கு வலுக்கிறது எதிர்ப்பு

வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை பிரித்தாளுவது காங்கிரஸின் குணம். இதில் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் கடந்த  2014ம் ஆண்டு முதல் அப்போதைய காங்கிரஸ் அரசு  மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை 'திப்பு ஜெயந்தி' என்று கொண்டாட  முடிவு செய்தது. இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த விழாவிற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

தற்போது, கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மைனாரிட்டியாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பியிருக்கிறது இதனால், காங்கிரஸ் அரசு ஆரம்பித்து வைத்த 'திப்பு ஜெயந்தி'யை நடத்த முடிவு செய்தது. இந்நிலையில், பல அமைப்புகளிலிருந்து இதற்கு பலமான எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. "திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்த  விடுதலை போராட்ட வீரர் மட்டுமல்ல இந்துக்களை கொன்று குவித்த மதவாதியும் கூட எனவே அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடகூடாது" என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆதரவளிக்கும் காங்கிரஸ் ஒருபுறம் எதிர்ப்புகள் மறுபுறம் என்று சிக்கித்தவிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமியோ உடல் நிலையை காரணம் காட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார். எனினும், எதிப்புகளை எப்படி எதிர் கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.