திமிங்கிலம் பிளாஸ்டிக் சாப்பிடுமா?

திமிங்கிலம் பிளாஸ்டிக் சாப்பிடுமா?

கிழக்கு இந்தோனேசிய கடற்கரையில் இறந்த நிலையில் ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது. மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திமிங்கிலத்தின் உடலை உடல் கூறு ஆய்வு செய்த வாகாடோபி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எடுக்கப்பட்டன. இதில் 115 பிளாஸ்டிக் கப்புகள், 25 பிளாஸ்டிக் பைகள்  4 பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட பல பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கும்.

உடற்கூறு ஆய்வு செய்த அதிகாரிகள் திமிங்கிலத்தின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், திமிங்கிலத்தின் மரணத்திற்கு பிளாஸ்டிக் தான் காரணமா என்பது நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், இவ்வளவு பிளாஸ்டிக் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

வாயில்லாத ஜீவன்களை மனதில் கொண்டாவது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.