திமுகவின் இரட்டை வேடத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

திமுகவின் இரட்டை வேடத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

ஹிந்தி எதிர்ப்பால் தமிழகத்தில் வளர்ந்த கட்சி எதுவென்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அது திமுக தான் என்று. எப்போதெல்லாம் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறதோ அப்போதெல்லாம் இந்தியை திணிக்காதே என்று ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு மக்களை திசை திருப்புவதே அவர்களின் திட்டமாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது என்பது வரலாறு. 


இப்போது இதோ மீண்டும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது திமுக. ஆனால் இந்த முறை மக்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியவில்லை. காரணம் சமூக வலைதளங்களின் ஆதிக்கம். சிசிடிவி கேமராவும் சமூக வலைதளங்களும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது என்ற பொய் பிரச்சாரத்தை ஆதாரத்துடன் பட்டென்று போட்டு உடைத்துள்ளனர் நமது நெட்டிசன்கள். 


இது ஒருபுறம் இருந்தாலும் திமுகவின் இரட்டை வேடத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் கதிர் என்கிற இணையதளத்தில் திமுக காரர்கள் நடத்தும் 45 தனியார் பள்ளிகளில் ஹிந்தி கட்டாய பாடமாக இருப்பதை ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளது. இவ்வாறு மக்கள் அனைவரும் உண்மையை புரிந்து கொள்ள ஆரம்பித்தால் இனி திமுக தமிழகத்தில் எப்படி அரசியல் செய்வது ? உடனடியாக மேல்மட்ட குழுவை ஒன்று கூட்டி இந்த காலத்திற்கு எப்படி பொய் சொல்வது என்பதை திட்டமிட்டால் மட்டுமே திமுகவுக்கு இனி அரசியல் செய்ய முடியும் என்கிற நிர்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


- Anand T Prasad