திமுகவின் நிலைப்பாடு

திமுகவின் நிலைப்பாடு

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  நூற்றாண்டுகளாய் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கபட்டவர்களுக்காகத்தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமே தவிர இட ஒதுக்கீட்டினால் வறுமையை ஒழிக்க முடியாது என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு உள்ளது. இந்த 10% சதவிகிதத்தையும் சேர்த்தால் 79% ஆகிவிடும். அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. என்றும் திமுக மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.